கடந்த 2000ஆம் ஆண்டுகளில் முன்னணி நடிகையாக இருந்த கஸ்தூரி சமீபத்தில் பேட்டிகள் கொடுத்து பரபரப்பை ஏற்படுத்தி வருவது தெரிந்ததே. குறிப்பாக நடிகர், நடிகைகள் அரசியலுக்கு வருவது குறித்தும், மற்ற சமூக பிரச்சனைகள் குறித்து பரபரப்புடன் பேசி வந்த கஸ்தூரி தற்போது நேற்று நிர்பயா வழக்கில் தூக்கு தண்டனை பெற்ற தீர்ப்பு குறித்து பேட்டி ஒன்றில் பரபரப்புடன் பேசியுள்ளார்.

நிர்பயா வழக்கில் நான்கு பேர்களுக்கு மரண தண்டனை கொடுத்ததால் நீதி நிலைநாட்டப்பட்டது என்றாலும், ஒரு குற்றவாளி மைனர் என்ற போர்வையில் தப்பியதை தன்னால் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை என்றும், இவ்வளவிற்கும் அந்த நபர்தான் மோசமான பாலியல் தாக்குதல் செய்ததாகவும் அவர் ஆதங்கப்பட்டுள்ளார்

இருப்பினும் இந்த தீர்ப்பு மிக மிக சக்தி வாய்ந்த தொடக்கமாக இருக்க வேண்டும் என்றும் நிர்பயாவின் பெற்றோரின் கண்ணீரிலிருந்து சட்டப் புரட்சி தொடங்க வேண்டும் என்பதே எனது நம்பிக்கை’ என்றும் அவர் கூறியுள்ளார்.