பிக்பாஸ் சீசன் 2வில் கலந்துகொள்ளும் பிரபலங்கள் யார் யார் என்று ஒரு பட்டியல் சமூகவலைத்தளங்களில் வைரலாகியது. பிக்பாஸ் 2வில் கலந்து கொள்ளும் வரிசையில் நடிகை கஸ்தூரியின் பெயர் வெளியாகியுள்ளது. இதுகுறித்து அவா் ட்விட்டர் பக்கத்தில் மறுப்பு தெரிவித்துள்ளார்.

நடிகை கஸ்தூரி வலைத்தள பக்கத்தில் எப்போதும் ஆக்டிவாக இருக்க கூடியவர். ட்விட்டா் பக்கத்தில் அவ்வப்போது அரசியல் குறித்தும் ஏதாவது ஒரு கருத்துக்கைளை பதிவிட்டி வருவதை வழக்கமாக வைத்திருப்பார். இந்நிலையில் பிக்பாஸ் 2வில் கலந்து கொள்ளப் போவதாக சமூக வலைதளங்களில் செய்தி பரவியது. இந்த போட்டியில் கலந்து கொள்ளும் பங்கேற்பாளர்கள் யார் என்று ஒரு லிஸ்ட் வெளியானதில் கஸ்தூரியின் பெயரும் அடிபட்டது.

கஸ்தூரி பிக்பாஸ் 2வில் தான் கலந்து கொள்ளவில்லை என்றும், தனக்கு பிக்பாஸ் முக்கியம் அல்ல என்னுடைய குட்டி பாஸ் தான் முக்கியம் என்று கூறியிருக்கிறார். தன்னை பிக்பாஸ் கலந்து சொல்லி யாரும் அணுகவில்லை என்றும் அப்படி அவா்கள் கேட்டிருந்தாலும் அதை முடியாது என்று மறுத்து கூறியிருப்பேன் என்று தெரிவித்துள்ளார். எனக்கு என் லிட்டில் பாஸ் இருக்கிறான். எனவே பிக்பாஸ் 2வில் கலந்து கொள்ளும் எண்ணம் இல்லை என்று கூறி தன்னுடைய மகன் புகைப்படத்தை பதிவிட்டுள்ளார்.