நடிகை கஸ்தூரி சமூக வலைதளங்களில் தீவிரமாக ஈடுபட்டுவருபவர். சமுக பிரச்சனைகள் குறித்து தொடர்ந்து டுவிட்டர் பக்கத்தில்கருத்துக்களை பகிர்ந்து வருகிறார் என்பது தெரிந்ததே.

 

தமிழகத்தில் பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா வின் பெரியார் சிலை குறித்த டுவிட் ஒன்று பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது. அவருடைய இந்த செயலுக்கு பலரும் தங்களது எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் இது தொடர்பாக கஸ்தூரி தனது டுவிட்டர் பக்கத்தில் தலை போற பிரச்சனை தமிழ்நாட்டில் பல இருக்க, சிலை,முலை பஞ்சாயத்து மட்டும்தான் பண்ணிக்கிட்டு இருக்கோம். அட போங்கப்பா என்று பதிவிட்டுள்ளார். மேலும் முலை என்பது ஆபாச வார்த்தை என்று நம்பும் அறிவிலிகள் வரிசையில் வாங்க…தமிழ் கிளாஸ் திருப்பாவை கிளாஸ் எல்லாம் எடுக்கனும் போல என்று பதிவிட்டுள்ளார்.