இளையதளபதி விஜய்க்கு 40 வயதுக்கும் மேல் ஆகிவிட்டாலும் இன்னும் இளம் நடிகர் போலவே உடம்பை சிக்கென்று வைத்துள்ளதால் அவர் இன்னும் இளமையான பாத்திரத்தில் நடித்து வருகிறார். கடந்த சில வருடங்களுக்கு முன் வந்த ‘நண்பன்’ படத்தில் கல்லூரி மாணவர் வேடத்திற்கு கூட அவர் ஃபிட் ஆகியிருந்தார்

இந்த நிலையில் கஸ்தூரியை விஜய் ரசிகர் ஒருவர் ‘ஆண்ட்டி’ என்று டுவிட்டரில் அழைத்தார். இதற்கு பதிலடி கொடுத்த கஸ்தூரி, ‘ தம்பி, தளபதி விஜய் அவர்களை விட நான் வயதில் சிறியவள். என்னை ஆன்ட்டி என்று அழைக்கும் முன் நீங்கள் விஜய்யை அங்கிள் கூப்பிடுங்கள் என்று பதிலடி கொடுத்தார்.

கஸ்தூரியின் இந்த கலாய்ப்பால் விஜய் ரசிகர்கள் அவர் மீது காட்டமாக இருக்கின்றார்கள். அமைதிப்படை அல்வா மேட்டரை வைத்து ஆபாசமாக அவரை விமர்சனம் செய்து வருகின்றனர்.