தமிழ் சினிமாவைப் பொருத்தவரை எம்.ஜி.ஆர்.,சிவாஜி, ரஜினி,கமல் என்ற வரிசையில் தற்போது விஜய்,அஜித் என தொடர்கிறது. இதில் விஜயை பொருத்தவரை  திரையுலக வளர்ச்சிக்கு அவரது தந்தைக்கு பெரும் பங்கு உண்டு. தனுஷ்,சூர்யா போன்றோர்களும் தங்களது தந்தையின் செல்வாக்கால் வளர்ந்தவர்கள். ஆனாலும் ஒரு கட்டத்தில் தனது திறமையை நிறுபித்து முன்னணி இடத்தை தக்கவைத்துக் கொண்டனர்.

இந்த  நிலையில் விஜய்,அஜித், சூர்யா இந்த மூவரில் யாரை உங்களுக்கு பிடிக்குமென்று நடிகை கஸ்தூரியிடம் ரசிகர் ஒருவர் டுவிட்டரில் கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த கஸ்தூரி,  அஜித் தான் பிடிக்கும். மற்ற இருவரும் தங்களது அப்பா மூலம் பிரபலம் ஆனவர்கள். ஆனால் உண்மையில் அஜித் தான் சர்வைவா என கூறியுள்ளார்.