Home சற்றுமுன் ரஜினியை இப்படியா கலாய்ப்பார் கஸ்தூரி?

ரஜினியை இப்படியா கலாய்ப்பார் கஸ்தூரி?

நடிகை கஸ்தூரி சமூகம் பற்றிய கருத்துக்களை அவ்வப்போது தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்து எப்போதும் ஆக்டிவாக இருப்பவர். தற்போது பெரிய விவாதமாக சென்றுகொண்டிருக்கும் விஷயமான சோபியா செய்தியை பற்றி சூப்பர் ஸ்டார் ரஜினி
எந்தவொரு கருத்தும் தெரிவிக்காமல் இருப்பது பற்றி தனது வலைத்தள பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார் நடிகை கஸ்தூரி.

இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் நடிகை கஸ்தூரி தெரிவித்த டுவிட்டை என்னவென்றால், ஊரே பற்றி எறிக்கிற விஷயமான சோபியா விவகாரத்தில் ரஜினி மட்டும் கருத்து தெரிவிக்க தயங்குவது ஏன்? தவறு நடக்கையில் பேசாமலிருப்பதும் தவறுதான் என்று பதிவிட்டுள்ளார்.


இந்த நிலையில் நேற்று ரஜினி நடிப்பில் சன் பிச்சர்ஸ் தயாரிப்பில் தயாராகும் பேட்ட படத்தின் போஷன் போஸ்டர் வெளியானது. இது உலக அளவில் டிரெண்டிங்கும் ஆனது.இந்த சூழ்நிலையில் கஸ்தூரி டுவிடட்ரில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அதில், இப்போ புரிஞ்சி போச்சு . பட ரிலீஸ் வரைக்கும் கமெண்ட்ஸ் இல்லை. என்று கூறியுள்ளார். இது ரஜினி ரசிகர்களை கோபம் அடைய வைத்துள்ளது.