நடிகை கஸ்தூரியின் குபீர் சிரிப்பு டுவிட்டர் பதிவு

கடந்த சில ஆண்டுகளுக்க்கு முன்னர் பிரபல நடிகையாக இருந்த கஸ்தூரி தற்போது அரசியல் பாதையை நோக்கி சென்று கொண்டிருப்பதாக கூறப்படுகிறது. அவரது கேலியும் கிண்டலுமான டுவிட்டர் பதிவுகள், ஆவேசமான பேட்டிகள் ஆகியவை இதை உறுதி செய்து வருகின்றன.

இந்த நிலையில் தனக்கு பிடித்த சூப்பர் ஹீரோக்கள் என்று சரவணா ஸ்டோர் சரவணன் மற்றும் அமைச்சர் செல்லூர் ராஜூ ஆகியோர்களை தனது டுவிட்டரில் கஸ்தூரி பதிவு செய்துள்ளார். இந்த குபீர் சிரிப்பு பதிவு டுவிட்டர் பயனாளிகளை வயிறு வலிக்க சிரிக்க வைத்துள்ளது. ஒருசிலர் இந்த லிஸ்ட்டில் மேலும் சிலரை இணைக்க ஆலோசனை கூறி வருகின்றனர்.

சமீபத்தில் நயன்தாராவிடம் இணைந்து நடிக்கவுள்ளதாக சரவணன் கூறியதும், வைகை அணையில் உள்ள தண்ணீர் ஆவியாகாமல் இருக்க தெர்மோகோல் போட்டு மூடும் திட்டத்தை அமைச்சர் செல்லும் ராஜூ செய்ததும், சமூக வலைத்தளங்களில் பெரும் கிண்டலுக்கு உள்ளானது என்பது குறிப்பிடத்தக்கது