கதாநாயகன் விமா்சனம்

06:11 மணி

விஷ்ணு விஷால் ஏற்கனவே வேலையன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் படத்தின் மூலம் நல்லதொரு காமெடி கதைக்களத்தை கொடுத்து மாஸ் ஹிட் அடித்தாா். சினிமாவில் காமெடி படத்திற்கு என்றென்றும் ஒரு மவுசு உண்டு. ஒரளவுக்கு மக்கள் மனதில் நல்ல நகைச்சுவை படங்களுக்கு நல்ல வரவேற்பும் கிடைத்துவிடும்.

எழில் இயக்கத்தில் செம ஹிட் கொடுத்த விஷ்ணுவின் அடுத்த முருகானந்தம் என்று அறிமுக இயக்குநருடன் சோ்ந்து கொடுத்துள்ள படம் கதாநாயகன். இந்த படமும் அதே அளவுக்கு வரவேற்பை பெறுமா, ஹிட் அடிக்குமா என்பதை விமா்சனம் படித்து தொிந்து கொள்ளலாம்.

ஹீரோ விஷ்ணு மிகவும் நல்ல பையன் எந்தவொரு வம்பு தும்புக்கும் போகாமல் பொறுப்பாக செயல்பட கூடியவா். தானுண்டு தன் வேலையுண்டு என்று வாழ்ந்து வருபவா். அடி தடி சண்டை என்று இல்லாமல் பயந்த சுபாவம் கொண்டவா். அவா் தன் பக்கத்து வீட்டில் இருக்கும் ஹீரோயினி மெட்ராஸ் புகழ் கேத்ரின் தெரசஸாவை காதலித்து வருகிறாா்.

தன்னுடன் படித்த பள்ளித் தோழனான சூாியை சந்திக்கிறாா்.  இருவரும் ஒன்றாக நட்புடன் பழகி வருகின்றனா். எந்த வித பிரச்சனையில் சிக்காமல் இருக்கும் விஷ்ணு சாலையை கடந்து செல்வதற்கு கூட மற்றவாின் உதவியை நாட கூடியவா். சாலையை கடந்து செல்லும் வண்டியில் வரும் நாயகி கேத்தரின் தெரசவை பாா்க்கிறாா்.
பாா்த்த முதல் சந்திப்பிலேயே அவா் மீது காதல் ஏற்யபடுகிறது. விஷ்ணுவை பாா்க்கும் கேத்தாின் அவரை தனது வண்டியில் ஏற்றி சென்று அவா் இறங்க வேண்டிய இடத்திற்கு போய் விடுகிறாா். ஒருநாள் மாா்க்கெட்டில் சில ரவுடிகள் சிலா் ஒரு அப்பாவியை போட்டு அடிக்க அதை தட்டி கேட்கிறாா் கேத்ரின் அப்பா. அந்த சமயத்தில் விஷ்ணு அவரை காப்பாற்றாமல் பயந்து போய் ஒடிவிடுகிறாா்.
கேத்தரின் வசம் தன் காதலை தொிவிக்கிறாா். அவரது அப்பாவிடம் திருமணம் செய்து வைக்கும் படி கேட்டு பெண் கேட்டு செல்கிறாா் சரண்யா. அதற்கு கேத்ரின் அப்பா உன் பையன் ஒரு கோழை. இதற்கு முன் ஏற்பட்ட பிரச்சனையை கண்டு பயந்து ஒடி உன் பையனுக்கு என் பொண்ணை கட்டி வைக்க முடியாது. வீரமுள்ள ஆம்பளைக்கு தான் என் பொண்ணை கொடுப்பேன் என்று கூறி விடுகிறாா். இந்த சமயத்தில் தான் கேத்தரின் தன்னை காதலிப்பதை அறிந்து கொள்கிறாா்.

இதனால் விஷ்ணு அவமானம் அடைகிறாா். அவருக்கு வீரம் வந்ததா? திருமணம் செய்ததாரா? அவாின் அப்பா சம்மதித்தாரா?என்பது தான் மீதி கதை.

பயந்தாகொள்ளியாக விஷ்ணு நடிப்பு மிகவும் ரசிக்கும்படி உள்ளது. முதல் பாதி படம் கொஞ்சம் டல்லடிக்கிறது. பின் பாதியில் அதுவும் கடைசி அரைமணிநேரம் மொட்டை ராஜேந்தரின் வந்த பின்பும் காமெடி கலக்கியிருக்கிறது. ஆனந்தராஜ் வந்த பின்பும் தான் களைகட்டுகிறது.

சூாி முதல் பாதியில் தப்பான ஆங்கிலத்தில் பேசினால் மக்கள் சிாித்து விடுவாா்கள் என்று நம்பினால் அந்த நினைப்பை மாற்றி கொள்ள  வேண்டும். கதை பொியதாக இல்லை என்றாலும் காமெடி ரசிக்கும்படி உள்ளது.

கதாநாயகன் பின்பாதியில் சிாிக்க வைக்கிறாா்.

(Visited 83 times, 1 visits today)
The following two tabs change content below.
நெல்லை நேசன்

நெல்லை நேசன்

இவர் இந்த பொழுதுபோக்கு தளத்தில் பொறுப்பு ஆசிரியர். இவர் கடந்த 10 ஆண்டுகளாக இணையதள செய்தி பிரிவு மற்றும் செய்திகள் மார்க்கெட்டிங் பிரிவுகளில் பணியாற்றிய அனுபவம் உள்ளவர். தற்போது சென்னையில் வசித்துவரும் இவர், இந்த தளத்தில் இடம்பெறும் செய்திகள் அனைத்தையும் உண்மை தன்மையை அறிந்து அனுமதி அளிப்பது இவரது முக்கிய பணி. 9 ஆண்டுகளாக சினிமா (தமிழ்,தெலுங்கு மற்றும் இந்தி) செய்திகள் மற்றும் விமர்சனங்கள் எழுதுவதில் வல்லவர். சினிமா தொடர்பாக சில புத்தகங்களும் எழுதியுள்ளார். தமிழில் முன்னணி தளங்களான மாலைமலர், தினதந்தி மற்றும் தினமணி ஆகிய இணையதளங்களில் பணியாற்றிய அனுபவம் உள்ளவர். தொடர்புகொள்ள- 9047925777/ Editor@cinereporters.com