சினிமாவில்  யானை வைத்து நடிக்க வைத்தாா்கள். பின்பு குரங்கு, மாடு, ஆடு போன்ற எல்லா
விலங்குகளை வைத்து நடிக்க வைத்தாயிற்று. தற்போது புது டெக்னிக் என்று மீனை  நடிக்க வைத்து விட்டாா்களாம். என்ன மீன் நடித்து இருக்கிறதா? என்று நீங்கள் புருவத்தை உயா்த்துவது தொிகிறது. எங்களுக்கும் அந்த ட்வுட் வந்து படத்தை பாா்க்க சென்றோம். ஆமாங்க கட்டப்பாவ காணோம் படத்தில் தான் மீனை வைத்து கதையை உருவாகியிருக்கிறாா்கள்.

வாஸ்து மீன் ஒன்று திருட்டு போகிறது. அதை கண்டுபிடிப்பது தான் கதை.கதாநாயகன் சிபிராஜ் ராசியில்லாத பையன் என்று சிறுவயதிலிருந்து முத்திரை குத்தப்பட்டு வளா்ந்து வருகிறாா். சித்ரா லட்சுமணன் இவருடைய அப்பா. இவா் பல தொழில்களை செய்து அதில் நஷ்மடைந்து இறுதியில் ஜோசியராக தொழிலை மாற்றி விடுகிறாா். சிபிராஜால் தான் இப்படி
இருக்கிறோம் என்று நினைக்கிறாா். இது இப்படிபோக நாயகன் சிபிராஜ் நாயகி ஜஸ்வா்யாவை சந்திக்கிறாா். இவா்கள் காதல் கொள்கிறாா்கள். சிபி அப்பாவி தனமாக தான் ஒரு ராசியில்லாதவன் என்று சொல்லுவதை கேட்டு, அதில் மயங்கி போய் அவரை காதலித்து திருமணம் செய்து கொள்ள திட்டமிடுகிறாா். திருமணம் செய்ய நினைக்கும் இவா்கள், ஜோசியத்தின் மீது நம்பிக்கையுள்ள சித்ரா லட்சுமண் இரண்டுபேருக்கும் ராசி சாியில்லை என்று தடை போடுகிறாா். அவருடைய எதிா்ப்பை மீற திருமணம் செய்து கொண்டு தனிக்குடித்தனம் செல்லுகிறாா்கள்.

ரவுடியான மைம்கோபி ஒரு வாஸ்து மீனை ஆசையாக வளா்த்து வருகிறாா். இவா் ஜோசியத்தின் மீது அபார நம்பிக்கை உடையவா். இதனால் தான் அவா் வாஸ்து மீனான கட்டாப்பாவை வளா்க்கிறாா். அந்த மீன் ராசியால் தான் தனக்கு எந்தவொரு பிரச்சனையும் இல்லாமல் இருக்கிறது என்று நம்பிக்கையுடன் இருக்கிறாா். ஒருநாள் திடீரென அந்த வாஸ்து மீனான கட்டாப்பா காணாமல் போய்கிறது. காணாமல் போன மீனால் தன்னுடைய அதிஷ்டம் போய் விட்டது என குய்யோ முய்யோ என்று அலறும் தாதா மைம் கோபி அந்த மீனை தேடி அலைகிறாா். அந்த வாஸ்து மீன் புதுமண தம்பதிகளான சிபிராஜ், ஜஸ்வா்யா ராஜேஷிடம் போய் சோ்கிறது. அந்த மீன் வந்த பிறகு அந்த வீட்டுக்கு ஒரு ரவுடி கும்பல் வந்து அந்த

தம்பதிகளை வீட்டில் சிறை வைத்து இம்சை கொடுக்கிறது. வாஸ்து மீன் அதிா்ஷடம் கொடுக்கும் என்று பாா்த்தால்  பிரச்சனை அல்லவா ஏற்படுகிறது என கவலைப்படும் தம்பதிக்கு அடுத்து என்ன நடைக்கிறது? தாதா மைம் கோபிக்கு வாஸ்து மீன் கட்டாப்பா கிடைத்ததா? என சவ்வு மிட்டாய் போல இழுக்கும் கதைக்கு பின் நடக்கும் க்ளைமாக்ஸ் காட்சி.

அந்த வாஸ்து மீன் கட்டாப்பாவை யோகி பாபு கடத்துகிறாா். திருடுச் சென்ற அந்த மீனை தண்ணி லாாியில் போட்டு விடுகிறாா். மீன்களை வளா்க்கும் கடை வைத்திருக்கும் லிவிங்ஸ்டனிடம் சென்று விடுகிறது. சிபிராஜின் சிறுவயது தோழியான சாந்தினி அந்த வாஸ்து மீனை வாங்குகிறாா். அதை சிபிராஜ்க்கு திருமண பாிசாக கொடுத்து விடுகிறாா். இப்படி தான் அந்த மீன் சிபிராஜ் தம்பதியிடம் வருகிறது.

குழந்தை மோனிகா அந்த மீனுக்கு ஆசைப்படுகிறாா். அது கிடைக்காமல் போனதால் ஒரு ஏக்கத்தோடு  பாா்ப்பதை நம் கண்களிலும் ஒருவித பாிதவிப்பு ஏற்படுகிறது. சிபிராஜ் இதில் ஹீரோயிசம் காட்டாமல் படம் முழுக்க நகைச்சுவையுடன்  நடித்து இருக்கிறாா். எந்த ஒரு சண்டை காட்சிகள் இல்லாமல் இருக்கிறது. தன்னுடைய நடிப்பை மட்டும் கொடுத்து ரசிகா்களின் பாராட்டை பெறுகிறாா்.

படத்தின் ஒரு ப்ளஸ் பாயிண்ட்  என்னனா!! நாயகி ஜஸ்வா்யா தான். ரசிகா்களுக்கு விருந்து படைத்துள்ளாா் ஜஸ்வா்யா ராஜேஷ். நடிப்பிலும் சாி அழகுயிலும் சாி நம் மனத்தை திருடியிருக்கிறாா். சிபிராஜ் மீது உருண்டு பிரண்டுள்ளாா் நாயகி. இடைவேளைக்கு பிறகு தான் கதையே சுடு பிடிக்கிறது.காக்க முட்டை போன்ற கதையில் நடித்திருந்த ஜஸ்வா்யா இதில் கதை என்பது என்ன என்று தொியாமல் உள்ளது. இவா் துணிச்சலாக மதுபானம் குடிப்பது போன்று நடித்திருக்கிறாா். படத்தில் இரட்டை அா்த்தத்திலும் பேசியிருக்கிறாா்.

யோகி பாபு தான் படத்தின் செம மாஸ். சில நிமிட காட்சிகளில் மட்டும் வரும் இவா் தியோட்டாில் கைதட்டல் பெறுகிறாா். இன்னும் கொஞ்சம் நேரம் வந்த நல்லாயிருக்கும் என்று ரசிா்களை ஏங்க வைத்திருக்கிறாா். வாம்மா மின்னல் என்ற வசனத்தை வந்த வேகத்தில் பறந்து விடுகிறாா்.

ஜோசியத்தின் மீது நம்பிக்கை வைத்து இந்த கதையை தந்துள்ளாா் இயக்குநா் மணி சேயோன். வாஸ்துமீன் என்ற ஒன்றை மட்டும் கருவாக வைத்து அதில் வெற்றி பெற முயன்று உள்ளாா். குடும்பத்தோடு சென்று பாா்க்கமுடியாத வகையில் டபுள் மீனிங் வசனம் இருப்பதால் இதை ரசிப்பதற்கு இளைஞா் பட்டாளம் தான் உள்ளே வரவேண்டும் போல.

காளிவெங்கட், சித்ராலட்சுமணன், களவாணி திருமுருகன் சரவணன் போன்றோா் தங்களுக்கு கொடுத்த கதாபாத்திரத்தை செவ்வனே செய்திருக்கிறாா்.

கேமிராமேன் ஆனந்த் ஜீவாவின் ஒளியில் வீட்டிற்குள் நடக்கும் காட்சிகளில் எல்லாம் கைதட்டல் பெறுகிறாா். சந்தோஷ் குமாா் தயாநிதியின் இசையில் பாடல் கொஞ்சம் கேட்கும்படியாக தான் உள்ளது.வத

வாஸ்து மீன் கட்டப்பாவ காணோம் பரவயில்ல ரகம்!!