பிரபல தெலுங்கு நடிகர் கத்தி மகேஷ் இவர் சமீபத்தில் இந்து கடவுள்களான ராமர்,சீதையை பற்றி அவதூறாக ஒரு டிவி விவாதத்தில் பேசினார் என இந்து அமைப்புகள் கடும் எதிர்ப்பு போராட்டங்களை நடத்தின.

பொது அமைதிக்கு பங்கம் வரும் வகையில் இவர் பேசியதாலும் சட்டம் ஒழுங்கை கருத்தில் கொண்டு கலவர சூழல் ஏற்படும் நிலை ஏற்பட்டதால் இவர் ஹைதராபாத் நகருக்குள் நுழைய 6 மாத தடை விதித்து டிஜிபி மகேந்திர ரெட்டி அறிவித்தார்.