பிரபல நடிகையான கவுசல்யா தமிழ் திரையுலகில் 90 மற்றும் 2000ஆம் ஆண்டுகளில் முன்னணி நடிகையாக இருந்தவா். 38 வயதாகும் கவுல்யா தற்போது திருமணம் செய்து கொள்ளவதாக கூறியுள்ளார். அவரது குடும்பத்தினர் திருமணத்திற்காக மாப்பிள்ளை தேடி வருகின்றனர்.

முரளி ஜோடியாக கவுசல்யா நடிப்பில் வெளிவந்த காலமெல்லாம் காதல் வாழ்க படத்தின் மூலம் மிகவும் பிரபலமடைந்தார். பெங்களூருவைச் சேர்ந்த கவுசல்யா தொடர்ந்து முன்னணி நடிகா்களாக இருந்த கார்த்திக், விஜய், பிரபுதேவா ஆகியோருடன் ஜோடியாக நடித்தார். நேருக்கு நேர், பிரயமுடன், சொல்லாமலே, பூவேலி, உன்னுடன், ஏழையின் சிரிப்பில், வானத்தைப்போல, மனதை திருடிவிட்டாய் என்று பல ஹிட் படங்களை கொடுத்தவா். மேலும் மலையாளம், தெலுங்கு கன்னட உள்ளிட்ட பல மொழி படங்களிலும் நடித்துள்ளார்.

பின்னர் இளம் நடிகைகளின் வரத்து அதிகரித்த காரணத்தாலும், வயதான காரணத்தாலும் அக்கா, அண்ணி போன்ற குணச்சித்திர கதாபாத்திரங்கள் தான் அவரை தேடி வந்தன.

நடிகை கவுசல்யா இதுவரை திருமணம் செய்து கொள்ளாமாலேயே இருந்தார். தற்போது திருமணத்திற்கு தயாராகி வருகிறார். இவருடன் நடிக்க வந்த நடிகைகள் அனைவரும் திருமணம் செய்து செட்டிலாகி விட்டனா். 38 வயதாகும் கவுசல்யாவிற்கு அவரது அம்மா அப்பா திருமணத்திற்கு மாப்பிள்ளை தேடி வருகின்றனா். மலையாள படப்பிடிப்பிற்காக கேரளா சென்ற கவுசல்யா திருமணம் செய்து கொள்ளப் போவதாக அறிவித்தார். இது பற்றி அவா் கூறியதாவது, நான் திருமணம் செய்துகொள்ள திட்டமிட்டு உள்ளேன். என் மனதுக்கு பிடித்தவரை திருமணம் செய்து கொள்ள இருக்கிறேன். எனது குடும்பத்தார் மாப்பிள்ளை தேடும் படலத்தை ஆரம்பித்து விட்டனார். எனவே விரைவில் திருமணம் நடக்கும் என்ற நம்பிக்கை இருக்கிறது.