திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலை குறித்து காவேரி மருத்துவமனை சற்று முன்னர் புதிய அறிக்கை ஒன்றை வெளியிட்டது. அதில் அவரது உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாக உள்ளதாக கூறப்பட்டுள்ளதால் திமுகவினர் கண்ணீருடன் பெரும் சோகத்துடன் உள்ளனர்.

95 வயதான கருணாநிதி முதுமை காரணமாக உடல் நலிவுற்று மிகவும் கவலைக்கிடமாக உள்ளார். கடந்த 11 நாட்களாக காவேரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சையில் உள்ள அவரது உடல்நிலை தொடர்ந்து மோசகமாக உள்ளது. இதனையடுத்து தொண்டர்கள் மருத்துவமனை முன்னர் குவிந்து வருகின்றனர்.

இந்நிலையில் சற்று முன்னர் காவேரி மருத்துவமனை வெளியிட்ட அறிக்கையில், அவரது உடல்நிலை மிகவும் மோசமடைந்தது என்று கூறப்பட்டுள்ளது. மேலும் உடல் உறுப்புகளின் செயல்பாடு மோசமான நிலையை அடைந்துள்ளது. கடந்த சில மணி நேரங்களாக கலைஞரின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது என்று தெரிவித்துள்ளது. இதனால் திமுகவினர் மிகவும் சோகமாக உள்ளனர்.