சுவாரஸ்யம் இல்லாத கவிதாலயாவின் புதிய லோகோ

பிரேமாலயா என்ற பெயரில் தயாரிப்பு நிறுவனம் நடத்திய இயக்குனர் சிகரம் கே. பாலச்சந்தர் அவர்கள் ஆரம்பக்கட்டத்தில் தான் இயக்கிய படங்களை இந்த பேனரில் எடுத்தார் அகர முதல எழுத்தெல்லாம் என்ற குறள் திருவள்ளுவர் சிலை பின்னணியில் கேட்பதாக இருக்கும். பிரேமாலயாவிலும் பின்பு 1981ல் ஆரம்பித்த கவிதாலயா நிறுவனத்திலும் வந்தது ஆரம்பத்தில் எம்.எஸ். வி அவர்களின் குரலில் அகர முதல எழுத்தெல்லாம் பாடல் ஆரம்பித்தது.

கேட்பதற்கு இனிமையாக இருந்தது பின்பு இளையராஜா குரலில் ஒலித்தது அதுவே பல வருடங்களாக பயன்படுத்தப்பட்டு வந்தது. தற்போது நாகரீக மாற்றத்தின் அடையாளமாக ஏ.ஆர் ரஹ்மானை பயன்படுத்தி லோகோ க்ரியேட் செய்து புதிதாக இசையமைத்து வெளியிட்டு உள்ளனர். என்னதான் வித்தியாசம் என்று சொன்னாலும் முன் இருவர் பாடியதில் இருந்த பாரம்பரிய பின்னணி இதில் இலை