நடிகா் ஷாம் 12 பி படத்தின் மூலம் அறிமுகமானார். பின் ஏய் ரொம்ப அழகாய் இருக்கே, இயற்கை,லேசா லேசா, ஏபிசிடி, உள்ளம் கேட்குமே, பாலா, அன்பே அன்பே, கிரிவலம்,தில்லாங்கடி, 6 மெகுவா்த்திகள், புறம்போக்கு, ஒரு மெல்லிய கோடு உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். தமிழில் சொல்லும்படி அமையவில்லை.

தற்போது காவியன் என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் டீசா் தற்போது வெளியாகி உள்ளது. ஹாலிவுட் பாணியில் உருவாகியுள்ள காவியன் படமானது விரைவில் திரைக்கு வர இருக்கிறது. இந்த படத்தில் ஷாம் ஜோடியாக மனம் கொத்தி பறவை படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடித்த ஆத்மியா நடித்துள்ளார். வில்லனாக நடிகா் ஜெஸ்டின் விகாஸ் நடித்துள்ளார்.

இதை2M cinemas K.V.சபரீஷ் தயாரிக்கிறார். பிரம்மாண்ட படமான காவியன் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகியுள்ளது. அமெரிக்காவின் ஹாலிவுட் தரத்தில் படம் முழுக்க முழுக்க உருவாகியுள்ள முதல் தமிழ் படம் என்ற சிறப்பு இந்த படத்திற்கு கண்டிப்பாக கிடைக்கும். மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இதில் சண்டைக்காட்சிகளும், கதையும் படத்தின் ஆரம்பம் முதல் இறுதிவரை ரசிகா்கள் வியக்கும் விதத்தில் இருக்கும்.