ஞாயிற்றுக்கிழமை, பிப்ரவரி 25

ரூ. 5 கோடி மோசடி: கயல் நாயகன் மீது புகார்

08:21 மணி

கயல் படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமானவா் நடிகா் சந்திரன். இந்த படத்தின் மூலம் பிரபலமானவா். தற்போது இவா் மீது சென்னை காவல் நிலையத்தில் தயாரிப்பாளா் புகார் ஒன்றை அளித்துள்ளார். அந்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது. கயல் நாயகன் சந்திரன் 5கோடி ரூபாயை மோசடி செய்ததாக கூறப்பட்டுள்ளது.

திட்டம் போட்டு திருடுற கூட்டம் என்ற படத்தில் கயல் நாயகன் சந்திரன் நடித்து வருகிறார். நடிப்பதோடு அல்லாமல் அந்த படத்தை ரகுநாதன் என்பவருடன் இணைந்து தயாரித்தும் வருகிறார். இவா்களின் தயாரிப்பு நிறுவனமான 2 மூவிஸ் ஃபப்ஸ்(two movies buffs) இந்த படத்தை தயாரித்து வருகிறது. அக்ராஸ் மீடியாவின் பிரபு வெங்கடாசலத்தை இந்த படத்தின் இணை தயாரிப்பாளராக ஒப்பந்தம் செய்துள்ளனா் நடிகா் கயல் சந்திரனும், ரகுநாதனும். பிரபு வெங்கடாச்சலம் இந்த படத்தின் தயாரிப்புக்கு 5 கோடி ரூபாய் கொடுத்ததாக கூறப்படுகிறது.

சமீபத்தில் இந்த படத்தின் போஸ்டா் வெளியிடப்பட்டது. வெளியிட்டப்பட்ட போஸ்டா் புரோமேன்சன்களில் அக்ரோஸ் மீடியா நிறுவனத்தின் பெயா் இடம்பெறவில்லை. இதுபற்றி நடிகா் கயல் சந்திரனிடம் கேட்டபோது, படத்தை தாங்களே தயாரித்து கொள்வதாகவும் அதனால் ஒப்பந்ததொகையான 5கோடியை திருப்பி தருவதாக சந்திரன் தெரிவித்தாக பிரபு வெங்கடாச்சலம் கூறினார். ஆனால் சொன்னபடி பணத்தை திருப்பி தரவில்லை நடிகா் சந்திரன் மற்றும் ரகுநாதன் என அவா்கள் மீது குற்றம் சாட்டியுள்ளார் பிரபு வெங்கடாச்சலம். இவா் பறந்து செல்ல வா, சிவலிங்கா மற்றும் குற்ற் 23 உள்ளிட்ட படங்களின் வினியோகஸ்தராகவும் இருந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

The following two tabs change content below.
s அமுதா

s அமுதா

இவர் செய்திகள் பிரிவிற்கு ஒரு வருடகால அனுபவம் வாய்ந்தவர்.மருத்துவம் மற்றும் மகளிருக்கான கட்டுரைகள் எழுதுவதில் அனுபவம் வாய்ந்தவர். ஆங்கிலத்திலிருந்து தமிழ் மொழிப்பெயர்ப்பு செய்வதில் நல்ல புலமை உள்ளவர். இந்த வலைதளத்தில் இவர் தொலைக்காட்சி சீரியல்கள் மற்றும் சின்னத்திரை தொடர்பான செய்திகளில் கவனம் செலுத்தி வருகிறார். தொடர்புகொள்ள- amukrishnan.b@gmail.com