பிக்பாஸ் நிகழ்ச்சியிலிருந்து வெளியேறிய சென்றாயன் தற்போது தனது மனைவியின் வளைகாப்பு நிகழ்ச்சியை நடத்தி உள்ளார். கிராமத்துகாரரும், வெகுளியான மனிதருமான சென்றாயனை பிடிக்காதவர்களே இல்லை என்று சொல்லலாம். அந்தளவுக்கு அவரது செயல்கள் இருந்தது. சென்றாயனுக்கு திருமணமாகி நான்கு ஆண்டுகள் ஆகிவிட்டது. ஆனால் சென்றாயனுக்கும் அவரது மனைவி கயல்விழிக்கும் குழந்தை பாக்கியம் அமையாமல் இருந்தது. இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வந்த நேரம் அவருக்கு அந்த கவலையும் தற்போது நீங்கியது. சென்றாயனின் மனைவி கா்ப்பம் தறித்துள்ளார். இந்த தகவலை அவரது மனைவி கயல்விழி பிக்பாஸ் நிகழ்ச்சியில் வெற்றி பெற்று விட்டு வரும் போது சொல்லலாம் என்று நினைத்து இருந்தார். ஆனால் பிக்பாஸ் போட்டியாளர்களின் குடும்பத்தினரை வரவழைத்த போது இந்த தகவலை அவரிடம் தெரிவித்தார் கயல்விழி.

இதையும் படிங்க பாஸ்-  'உங்கள் அன்பிற்கு நன்றி சொன்னால் போதுமானதாக இருக்காது'- டிவிட்டரில் பிக்பாஸ் ஜனனி

பிக்பாஸ் வீட்டிற்குள் கயல்விழியும், சென்றாயனின் அப்பா அம்மா வந்த போது அங்கு வைத்து அவருக்கு வளைகாப்பு நடந்தப்பட்டது. இந்நிலையில் கயல்விழிக்கு அவரது வீட்டில் வைத்து ஐந்தாவது மாதம் நடத்தப்படும் வளைகாப்பு விழா நடந்தப்பட்டிருக்கிறது. கயல்விழியின் தங்கை வளைகாப்புக்கு வந்துள்ளார் சென்றாயன். அதன்பிறகு இரண்டு நாட்கள் கழித்து கயல்விழிக்கு வளைகாப்பு நடத்தப்பட்டுள்ளது.

இதையும் படிங்க பாஸ்-  தீனாவை அடுத்து நிஷாவுக்கு தோள் கொடுத்த தனுஷ்