kazhugu 2 first look

தற்போது எல்லாம் படம் எடுக்கும்போது அதன் இரண்டாம் பாகத்தை சேர்த்து படமாக்கும் வழக்கம் ஆரம்பம் ஆகிவிட்டது. இப்போது எந்த படத்தை எடுத்தாலும் அதன் தொடர்ச்சியாக இரண்டாம் பாகம் வெளி வர தொடங்கி விட்டது. பில்லா 2, மாரி 2, எந்திரன் 2, முனி 2 என இரண்டாம் பாகத்தின் பட்டியல் நீண்டு கொண்டே போகிறது. அந்த வரிசையில் கழுகு 2 தற்போது இடம் பிடிக்க இருக்கிறது.

கிருஷ்ணா, பிந்து மாதவி நடிப்பில் வெளிவந்த படம் கழுகு. இதில் கருணாஸ் உள்பட பலரும் நடித்த இந்த படம் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தில் தற்கொலை பாயிண்ட் இடத்திற்கு வந்து காதல் ஜோடிகள் தற்கொலை செய்து கொள்வார்கள். அவர்களது உடலை தேடி எடுத்து கொடுக்கும் பணியை கிருஷ்ணா அன்கோ கருணாஸ் செய்து வருவார்கள் இது படத்தின் கதை. தற்போது கழுகு படத்தின் இரண்டாம் பாகம் உருவாக உள்ளது. கழுகு 2 படத்தின் படப்பிடிப்பு இன்று ஆரம்பமாக உள்ளது. இதிலும் கிருஷ்ணா அவருக்கு ஜோடியாக பிந்து மாதவி நடிக்கும் இந்த படத்தை சத்யா சிவா இயக்குகிறார். யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். தயாரிப்பு திருப்பூர் பி.ஏ கணேசன்.

kazhugu 2 bindu madhavi

கழுகு 2 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது வெளியாகியுள்ளது. இதன் படப்பிடிப்பு இன்று ஆரம்பமாக உள்ளது.