வெற்றி பெற்ற படங்களின் இரண்டாம் பாகங்கள் உருவாகுவது இப்போது அதிகரித்து வருகிறது.

அந்த வகையில், சில வருடங்களுக்கு முன் கிருஷ்ணா, பிந்து மாதவி நடித்து வெற்றி பெற்ற கழுகு படத்தின் இரண்டாம் பாகம் கழுகு-2. என்ற பெயரில் தயாராகியுள்ளது.

கிருஷ்ணா – பிந்துமாதவி ஜோடி மீண்டும் இணைந்து நடித்து வரும் இப்படத்தை கழுகு படத்தை இயக்கிய சத்யசிவாவே இயக்கியுள்ளார். இந்த படத்தில் காளிவெங்கட் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார், ராஜா பட்டாசார்ஜி ஒளிப்பதிவு செய்துள்ளார்.

இந்தப்படத்தை பிரபல விநியோகஸ்தரும் தயாரிப்பாளருமான சிங்காரவேலன் தயாரிக்கிறார். கழுகு 2 படத்தில் முக்கிய சிறப்பு அம்சமாக நடிகை யாஷிகா ஆனந்த் ஒரு பாடலுக்கு நடனமாடியுள்ளார். ‘சகலகலா வள்ளி’ எனும் இந்தப்பாடல் கிட்டதட்ட 300 நடன கலைஞர்களுடன் பிரமாண்டமான முறையில் படமாக்கப்பட்டுள்ளது. பிரபல நடன இயக்குனர் தீனா இந்த பாடலுக்கு நடனம் அமைத்துள்ளார். இந்த பாடல் யூடியூப்பில் வெளியாகி உள்ளது. ரசிகர்களை கிறங்கடிக்கும் வகையில் யாஷிகா ஆனந்த் கிருஷ்ணாவுடன் ஆட்டம் போட்டுள்ளார்.