நடிகர், இயக்குனர் பார்த்திபனின் மகள் கீர்த்தனாவின் திருமணம் வரும் மார்ச் 8ஆம் தேதி நடைபெறவுள்ளதாகவும், அதற்காக பார்த்திபன் திரையுலக பிரமுகர்களை நேரில் சந்தித்து அழைப்பிதழ் கொடுத்து வருவதாகவும் கடந்த இரண்டு நாட்களாக செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன

இந்த நிலையில் கீர்த்தனா திருமணம் செய்யப்போகும் மாப்பிள்ளை குறித்த தகவல் தற்போது வெளிவந்துள்ளது. விஜய் நடித்து வரும் ‘தளபதி 62’ படத்திற்கு படத்தொகுப்பு செய்து வருபவரும் பிரபல படத்தொகுப்பாளருமான ஸ்ரீகர் பிரசாத்தின் மகன் அக்சய் அக்கினேனியை திருமணம் செய்யவுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.

கார்த்திக் சுப்புராஜ் இயக்கிய பீட்சா’ படத்தை இந்தியில் ரீமேக் செய்தவர் தான் இந்த அக்சய் என்பது குறிப்பிடத்தக்கது