மணிரத்னம் இயக்கவுள்ள பொன்னியின் செல்வன் படத்தில் குந்தவை வேடத்தில் கீர்த்தி சுரேஷ் நடிக்க இருக்கிறார்.

மணிரத்னம் பல வருடங்களாக எடுக்க முயற்சி செய்து வரும் பொன்னியின் செல்வன் திரைப்படம் தற்போது அவருக்கு சாத்தியமாகியுள்ளது. இப்படத்தில் விஜய் சேதுபதி, விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, அமிதாப்பச்சன், ஐஸ்வர்யா ராய் பல பலரும் நடிக்கவுள்ளனர் என தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில், இப்படத்தில் நடிக்க கீர்த்திசுரேஷ் ஒப்புக்கொண்டுள்ளார். பொன்னியின் செல்வன் நாவலில் வரும் வந்தியதேவன் கதாபாத்திரத்தில் கார்த்தி நடிக்கவுள்ளார். எனவே, குந்தவை கதாபாத்திரத்தில் நடிக்க கீர்த்தி சுரேஷ் தேர்வாகியுள்ளார். அதேபோல், விக்ரம் ஜோடியாக வானதி கதாபாத்திரத்தில் ஐஸ்வர்யா ராய் நடிப்பார் எனக்கூறப்படுகிறது.