நாக் அஸ்வின் இயக்கத்தில், வைஜெயந்தி மூவிஸ் பிரம்மாண்டமாக தயாரித்துள்ள ‘மகாநதி’ தெலுங்கு திரைப்படம் நேற்று வெளியானது. தமிழில் நடிகையர் திலகம் என்ற பெயரில் இன்று வெளியாகியுள்ளது. மறைந்த முன்னாள் பழம்பெரும் நடிகை சாவித்திரியின் வாழ்க்கையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இந்த படத்தில் சாவித்திரி வேடத்தில் கீர்த்தி சுரேஷும், ஜெமினி கணேசனாக துல்கர் சல்மானும் நடித்துள்ளனர்.

இந்த படத்தில் சாவித்திரியாக நடித்துள்ள கீர்த்தி சுரேஷின் நடிப்பை பார்த்து அனைவரும் வியந்து பாராட்டி வருகின்றனர். சினிமா பிரபலங்களும் கீர்த்திசுரேஷ் மற்றும் துல்கர் சல்மான் நடிப்பை புகழ்ந்து தள்ளுகின்றனர்.

முதலில் சாவித்திரி வேடத்தில் கீர்த்திசுரேஷ் நடிக்கப்போகிறார் என அறிவிப்பு வெளிவந்தபோதே சாவித்திரி கதாபாத்திரத்திற்கு பொருத்தமாக இருக்கமாட்டார் என பலரும் எதிர்ப்பு தெரிவித்தனர். தற்போது படத்தில் அவரின் நடிப்பை பார்த்து வியந்துள்ளனர். அவருக்கு எதிராக வந்த விமா்சனங்கள் எல்லாம் தற்போது தவிடு பொடியாகி விட்டது.

இந்நிலையில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கையை படமாக எடுக்கும் திட்டம் உள்ளதாகவும் அதை விரைவில் எடுக்க முயற்சி நடந்து வருகிறது. சாவித்திரி வாழ்க்கை வரலாறு படத்தில் நடித்த கீர்த்தி சுரேஷின் நடிப்பை பார்த்து அவரையே ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு படத்தில் நடிக்க வைக்கலாமா என்று யோசித்து வருகிறார்களாம்.

ஏற்கனவே சாவித்திரியாக நடிக்க கீர்த்திசுரேஷ் பொருத்தமானவர் இல்லை என்று எதிர்ப்பு கிளம்பியது. அதுபோல ஜெயலலிதாக நடிக்க அவர் கொஞ்சம் கூட பொருந்த மாட்டார். நடிப்பில் கலக்கலாக மிரட்டும் ரம்யா கிருஷ்ணன் தான் ஜெயலலிதா கேர்க்டருக்கு சரியான பொருத்தமாக இருக்க கூடியவர். அவரது மிரட்டலான நடிப்பை நாம் ஏற்கனவே படைப்பாவில் பார்த்து இருக்கிறோம்.

எனவே ஜெயலலிதாவின் கம்பீரமான தோற்றம், வீரம், தன்னம்பிக்கை எல்லாம் ரம்யா கிருஷ்ணனிடம் தான் உள்ளது என்று பலரும் கூறுகின்றனர். ஜெயலலிதாவின் தன்னம்பிக்கை மிகுந்த கேரக்டரில் நடிக்க சரியாக பொருந்த கூடியவர் நடிப்பில் மிரட்டிய ரம்யா கிருஷண்ன் சரியான தோ்வாக இருக்கும் என்று கோடான கோடி ரசிகர்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.