கீர்த்தி சுரேஷின் ஆசை: நிறைவேற்றுவாரா தல

தமிழில் முன்னணி இடத்தை நோக்கி வேகமாக வளர்ந்து வருபவர் நடிகை கீர்த்தி சுரேஷ். வருத்தப்படாத வாலிபர் சங்கத்தில் அறிமுகம் ஆன அவர் குறுகிய காலத்திலேயே விஜய்,சூர்யா போன்ற நடிகர்களின் படங்களில் நடித்துவிட்டார். விஜய் உடன் கீா்த்தி சுரேஷ் பைரவா படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்துள்ளாா்.

இந்த நிலையில் சேலத்தில் நகைக்கடை திறப்பு விழாவிற்கு வந்த கீர்த்தி சுரேஷ் பேசும்போது, உங்கள் அன்புக்கு நன்றி. பைரவாவில் விஜயுடன் சேர்ந்து நடித்த அனுபவத்தை பற்றி சொல்லி தெரியவேண்டியது இல்லை. சூர்யாவுடன் தானா சேர்ந்த கூட்டம் படத்தில் நடித்து வருகிறேன். என்னுடைய அடுத்த ஆசை அஜீத்துடன் நடிக்க வேண்டும். விரைவில் அவருடன் நடிப்பேன் என்று கூறினார்.

விஷால் உடன்  சண்டை கோழி 2 படத்திலும் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளாா் என்பது குறிப்பிடத்தக்கது.வளா்ந்து வரும் இளம் நடிகைகளில் ஒருவரான  கீா்த்தி குறுகிய காலத்திலேயே முன்னணி நடிகா்களுடன் ஜோடி சோ்ந்து  கலக்கிக் கொண்டிருக்கிறாா்.