Home சற்றுமுன் நீங்க யாரோட உண்மையான ரசிகை கீர்த்தி சுரேஷை கலாய்க்கும் நெட்டிசன்கள்

நீங்க யாரோட உண்மையான ரசிகை கீர்த்தி சுரேஷை கலாய்க்கும் நெட்டிசன்கள்

நடிகை கீர்த்தி தமிழ் சினிமாவின் முன்னணி இளம் நடிகை, ரஜினி முருகன், பைரவா, தானா சேர்ந்த கூட்டம், சமீபத்தில் வந்த நடிகையர் திலகம் உட்பட பல படங்களில் தன் திறமை மற்றும் அழகு மூலம் சினிமா உலகில் பிரபலமான நடிகையாக விளங்குகிறார்.

கீர்த்தி சுரேஷை கலாய்த்து சில மீம்ஸ்கள் சமூக வலைதளங்களில் வருகின்றன அவற்றில் ஒன்றுதான் இந்த மீம்ஸ்.

நான் விஜய்யின் தீவிர ரசிகை என பைரவா படத்தின்போது சொன்னதையும் ,  தானாசேர்ந்த கூட்டத்தின்போது நான் சூர்யாவின் ரசிகை என சொன்னதையும், தெலுங்கு திரைப்படமான அக் நிய தவசியின் போது நான் பவன் கல்யாணின் தீவிர ரசிகை என சொன்னதையும், இப்போது சாமி 2 பாடல் வெளியீட்டின்போது நான் விக்ரமின் தீவிர ரசிகை என சொன்னதையும் கலாய்த்து நீங்க யாருக்குத்தாம்மா தீவிர ரசிகை என்று மீம்ஸ் க்ரியேசன் செய்து பலர் பகிர்ந்து வருகின்றனர்.