ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் உருவாகி வரும் விஜய் 62 என்ற படத்தில் விஜய் மற்றும் கீர்த்தி சுரேஷ் நடித்து வருகிறார். தற்போது விஜய் 62 படத்தின் படப்பிடிப்பு சென்னையில் உள்ள பச்சையப்பன் கல்லூரி அருகே நடைபெற்று வருகிறது. இதில் 100 மாணவா்களுடன் விஜய் பைக்கில் பேரணியாக வலம் வரும் காட்சி படமாக்கப்பட்டது. அந்த காட்சி இணையத்தளத்தில் வெளியாகி உள்ளது.

இதையும் படிங்க பாஸ்-  என்.டி.ராமராவ் மனைவியாக நடிக்க வித்யா பாலனுக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமா?

அதுபோல சாவித்திரியின் வாழ்க்கை வரலாறு தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகி வருகிறது. இந்த படத்திலும் நடிகை கீர்த்தி சுரேஷ் நடித்து வருகிறார்.இந்த படத்தின் ப்ரோமோஷன் பணிகளில் கலந்து கொண்டு வருகிறார். நடிகையா் திலகம் என்று தமிழிலும், தெலுங்கில் மகாநதி என்ற பெயரிலும் உருவாகி வரும் சாவித்திரியின் வாழ்க்கை வரலாறு படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு அண்மையில் நடைபெற்றது.

இதையும் படிங்க பாஸ்-  தோனி ஓய்வு … சி.எஸ்.கே-வின் அடுத்த கேப்டனாகிறாரா ரெய்னா ?...

அந்த படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்புக்கு பிறகு பிரபல பத்திரிக்கை ஒன்றிற்கு பேட்டியளித்த நடிகை கீா்த்தி சுரேஷ் வசம் உங்களுக்கு பிடித்த ஐபிஎல் டீம் எது என்ற கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு கீா்த்தி சுரேஷ் எனக்கு கிரிகெட்டை ரொம்ப பிடிக்கும். விரும்பி பார்ப்பேன். எனக்கு பிடித்த ஐபில் டீம் எது என்றால் அது நம்ம சிஎஸ்கே தான் என்று கூறியுள்ளார்.

இதையும் படிங்க பாஸ்-  மகளுக்காக அமெரிக்கா சென்ற விஜய்!