ஞாயிற்றுக்கிழமை, செப்டம்பர் 24

ஒரு கோடி சம்பளம் பெறும் கீர்த்தி சுரேஷ்?

09:38 காலை

நடிகை கீர்த்தி சுரேஷ் தெலுங்கு படத்தில் நடிப்பதற்காக ரூ.1 கோடி சம்பளம் பெற இருக்கிறார் என செய்தி வெளியாகியுள்ளது.

சினிமா உலகைப் பொருத்தவரை அதிக சம்பளம் வாங்கும் நடிகைதான் பெரிய நடிகை. அதாவது நம்பர் ஒன் நடிகை. தற்போது நிலவரப்படி நடிகை நயன்தாராதான் அந்த இடத்தில் இருக்கிறார். சில வருடங்களாகவே அந்த இடத்தில் இருந்து அவர் விலகாமல் இருக்கிறார். தமிழை விட தெலுங்கில் அவருக்கு அதிக சம்பளம் கொடுப்பதாக தெரிகிறது.

தற்போது அவர் தமிழில் ரூ. 3 கோடி வரை சம்பளம் பெறுகிறார் எனக் கூறப்படுகிறது. அவருக்கு அடுத்து சமந்தா, காஜல் அகர்வால் ஆகியோர் ரூ.2 கோடி வரை பெறுகிறார்கள் எனவும், ஸ்ருதிஹாசன் ரூ.1 கோடி வரை பெறுகிறார் எனக் கூறப்படுகிறது.

இந்நிலையில், நடிகை கீர்த்தி சுரேஷ் சமீபத்தில் தெலுங்கு பட உலகில் காலெடுத்து வைத்தார். பவன்கல்யாணுக்கு ஜோடியாக நடித்தார். இந்நிலையில், பிரபல தெலுங்கு தயாரிப்பாளரான பெல்லம் கொண்டா சுரேஷ், அவரது மகன் சாய் ஸ்ரீனிவாஸ் கதாநாயகனாக நடிக்கும் ஒரு புதிய படத்திற்கு, கீர்த்தி சுரேஷ அணுகியுள்ளார். ஆனால், கால்ஷிட் இல்லததால் கீர்த்தி நடிக்க மறுத்துவிட்டார்.

எனவே, ரூ.1 கோடியை அவருக்கு சம்பளமாக கொடுக்க அவர் முன் வந்தார். எனவே, அப்படத்தில் நடிக்க கீர்த்தி சுரேஷ் ஒத்துக்கொண்டதாக தெரிகிறது.

இந்த செய்திதான் தற்போது கோடம்பாக்கத்தில் சூடான செய்தியாக பரபரப்பாக விவாதிக்கப்பட்டு வருகிறது.

(Visited 13 times, 1 visits today)
The following two tabs change content below.
மகாலட்சுமி
இவர் இணையதள செய்திகள் பிரிவில் 5 ஆண்டுகள் பணியாற்றிய அனுபவம் உள்ளவர். சினிமா மட்டுமல்லாமல் தமிழகம் மற்றும் இந்தியாவில் நடைபெறும் முக்கிய சம்பவங்களை உடனுக்குடன் கொட்டுப்பதில் முதன்மையானவர். ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கு மொழிப்பெயர்ப்பதில் சிறப்பு புலமை வாய்ந்தவர். சினிமா துறையில் முக்கிய நிகழ்வுகள் மற்றும் பழம்பெரும் நடிக- நடிகைகள், இயக்குனர்கள் குறித்த சுவையான சம்பவங்களை தொகுத்து சிறப்பு கட்டுரைகளாக வழங்குவதில் பெயர் பெற்றவர். தொடர்புகொள்ள- mahamurugan@gmail.com