விஷால் ஜோடியாக  கீர்த்தி சுரேஷ் நடித்த சண்டக்கோழி 2 படப்பிடிப்பு முடிந்து படம் வரும் அக்டோபர் 18 பூஜா ஹாலிடேஸில் படம் வெளியாக உள்ளது.

இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்தவுடன் படத்தில் பணியாற்றிய அனைவருக்கும் தங்கக்காசு பரிசளித்துள்ளார். இது போல இவர் நடித்த நடிகையர் திலகம் படத்திலும் அனைவருக்கும் தங்க காசு பரிசளித்துள்ளார் கீர்த்தி சுரேஷ்.

படத்தில் நடித்தது தனக்கு மிகவும் மன நிறைவாக இருக்கும் பட்சத்தில் இது போல் தங்ககாசு பரிசளிப்பதாக தெரிகிறது. இவர் ஏற்கனவே நடித்த நடிகையர் திலகம் படத்தில் சிறப்பாக நடித்ததற்காக பலரிடம் பாராட்டு பெற்றார்.

அதுபோல் இப்படத்திலும் நடிப்பில் பட்டைய கிளப்பி இருப்பார் என எதிர்பார்க்க முடிகிறது.