ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் புதிய படத்தில் நடிக்க முடியாமல் போனது கீர்த்தி சுரேஷுக்கு கடும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளதாம்.

விஜயை வைத்து ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கிய சர்கார் படத்தில் கீர்த்தி சுரேஷ் நடித்தார். எனவே, எனது அடுத்த படத்தில் நீதான் ஹீரோயின் என அவருக்கு முருகதாஸும் வாக்கு கொடுத்திருந்தார். ரஜினியை வைத்து அவர் இயக்கவுள்ள தர்பார் படத்திலும் ரஜினிக்கு ஜோடியாக அவரைத்தான் நடிக்க வைக்க வேண்டும் என முருகதாஸ் நினைத்திருந்தாராம். எனவே, ரஜினிக்கு ஜோடியாக நடிக்கப்போகிறோம் என்கிற குஷியில் இருந்தார் கீர்த்தி சுரேஷ்.

ஆனால், நயன்தாராதான் ஹீரோயின் என ரஜினி கூறி விட மறுப்பு கூற முடியாமல் திரும்பி விட்டார் முருகதாஸ். எனவே, ரஜினியுடன் நடிக்கும் வாய்ப்பு பறிபோனதால் கடும் அப்செட்டில் கீர்த்தி சுரேஷ் இருப்பதாக செய்திகள் கசிந்துள்ளது.