மலையாள சினிமாவில், ‘கீதாஞ்சலி’ படத்தின் மூலம்
ஹீரோயினியாக அறிமுகமானவர் கீர்த்தி சுரேஷ்.
2013-ல் பிரியதர்ஷன் இயக்கத்தில் மோகன்லாலுக்கு
ஜோடியாக கீர்த்தி நடித்துள்ளார்.

தமிழ் மற்றும் தெலுங்கில் முன்னணி நடிகையாக உள்ள
கீர்த்தி சுரேஷ் தற்போது அடுத்து ஒரு புதிய படத்திலும்
நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

பிரியதர்ஷன் இயக்கும் புதிய படத்தில் மோகன்லாலுக்கு
ஜோடியாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் கீர்த்தி சுரேஷ்.

இப்படத்திற்கு ‘மராக்கர்: அரபிக்கடலிண்டே சிம்ஹம்’ என்று
பெயர் சூட்டப்பட்டுள்ளது. இந்தப் படத்தில் மோகன்லாலின்
மகன் பிரணவ் மோகன்லால், இயக்குனர் பிரியதர்ஷனின்
மகள் கல்யாணி பிரியதர்ஷன் நடிக்க உள்ளனர். இந்தப்
படம் பெரிய பட்ஜெட்டில் உருவாகி வருகிறது.