keerthi suresh

ஓட்டு மொத்த திரையுலகத்தை திரும்பி பார்க்க வைத்த படம் நடிகையர் திலகம். நடிகை சாவித்திரியின் வாழ்கையை மையமாக வைத்து இரு மொழிகளில் உருவாகி அனைவரது பாராட்டை பெற்ற படம். கீர்த்தி சுரேஷ் நடிகையர் திலகம் சாவித்ரி வாழ்க்கை வரலாறு படத்தால் தமிழ், தெலுங்கில் சிறந்த நடிகை என்ற பெயரை எடுத்துள்ளார். நாயகனுடன் அழகு பதுமையாக டூயட் மட்டும் பாடி ஆடாமல் தன்னுடைய சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளார். அவர் அண்மையில் அளித்த பேட்டி ஒன்றில் கூறியதாவது:

“சினிமா உலகில் என்னை விட அழகும் திறமையும் உள்ள நடிகைகள் நிறைய பேர் இருக்கிறார்கள். ஆனாலும் எனக்கு நல்ல கதையம்சம் உள்ள கதாபாத்திரங்கள் அமைவதற்கு காரணம் அதிர்ஷ்டம்தான். எனவே அதிர்ஷ்டம் மீது எனக்கு நிறைய நம்பிக்கை இருக்கிறது. அதற்காக அதிர்ஷ்டம் ஒன்று மட்டும் எப்போதும் கை கொடுக்காது, அதே நேரம் திறமையும் முக்கியம். நடிகையர் திலகம் சாவித்திரி வாழ்க்கை கதை படத்தில் நடித்த பிறகு அழுத்தமான கதைகளில் நடிக்க வாய்ப்புகள் வருகின்றன.

mahanathi

அதுபோல கதைகளை தேர்வு செய்வதில் மிகவும் கவனமாக இருக்கிறேன். கதைகள் கேட்கும்போது இதில் நடிக்கலாம் என்று மனது சொன்னால் மட்டுமே அதை ஏற்கிறேன். மேலும்  முத்த காட்சியில் நடிக்க எனக்கு கொஞ்சம் கூட விருப்பம் இல்லை. அதுபோன்ற காட்சிகளுடன் எனக்கு சில படங்களில் நடிக்க வாய்ப்புகள் வந்தன. ஆனால் நான் முத்த காட்சியில் நடிக்க மாட்டேன் என்ற காரணத்தால் அந்த பட வாய்ப்புகள் என்னிடமிருந்து கைநழுவி போய் விட்டன.

மேலும் எனக்கு சவுகரியமாக இல்லாத கதாபாத்திரங்களில் நடிக்க மாட்டேன். அந்த காட்சி கதைக்கு தேவையாக இருந்தாலும் சம்மதிக்க மாட்டேன். எனக்கு கூச்ச சுபாவம் உண்டு. முத்த காட்சிகளில் என்னால் சகஜமாக நடிக்கவும் முடியாது.”

இவ்வாறு கீர்த்தி சுரேஷ் கூறினார்