தமிழ் சினிமாவில் நடிப்பில் முத்திரை பதித்தவா்கள் இரண்டு பேர். நடிகரில் ஒருவா் சிவாஜி கணேசன். நடிகைகளில் சாவித்திரி. நடிகா் திலகம் என்று சிவாஜியையும், நடிகையா் திலகம் என்று சாவித்திரியை அழைக்கும் அளவிற்கு நடிப்பில் இருவரும் அசத்தினார்கள். தற்போது சாவித்திரி வாழ்க்கை வரலாறு படமாக உருவாகி வருகிறது. மறைந்த நடிகை சாவித்திரி வாழ்க்கையை படமாக எடுக்கப்பட்டு வருகிறது. இந்த படத்தில் சாவித்திரி கேரக்டரில் நடிகை கீா்த்தி சுரேஷ் நடிக்கிறார். நாக் அஸ்வின் இயக்கும் இந்த படமானது தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகிறது. நடிகையர் திலகம் என்ற பெயரில் தமிழிலும், மகாநதி என்று தெலுங்கிலும் தயாராகி வருகிறது.

சாவித்திரி வேடத்தில் கீா்த்தி சுரேசும், ஜெமினி கணேசன் வேடத்தில் துல்கா் சல்மானும் நடித்துள்ளனா். சாவித்திரி வேடத்தில் நடிக்க யாரலும் முடியாது என கூறி பல்வேறு தரப்பிலிந்து எதிர்ப்புகள் கிளம்பின. இதுவரை சாவித்திரி வாழ்க்கை வரலாறு படத்தின் புகைப்படம் வெளிவர வில்லை.தற்போது சாவித்திரி கேரக்டரில் நடிக்கும் கீா்த்தி சுரேஷின் புகைப்படம் வெளியாகி உள்ளது.

பழம்பெரும் நடிகை ஜமுனா சாவித்திரி வாழ்க்கையை படமாக்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அதில் சாவித்திரியாக நடிக்கும் கீர்த்தி சுரேஷ் பொருத்தமானவா் இல்லை என்று கூறியிருந்தார். இதற்கு பதிலளித்த கீர்த்தி சுரேஷ், சாவித்திரியின் பழக்க வழக்கங்கள் எனக்கும் இருக்கிறது. அவரது வாழ்க்கை வரலாற்றை நன்றாக படித்து தெரிந்துகொண்டுதான் நடிக்கிறேன் என்று கூறினார்.

இப்படத்தில் சாவித்திரியாக கீர்த்திசுரேஷூம், ஜெமினி கணேசனாக துல்கர் சல்மானும் நடிக்கின்றனா். சமந்தா ஒரு பத்திரிகை நிருபராக நடிக்கிறார். முக்கிய தோற்றத்தில் பிரகாஷ்ராஜ் நடிக்கிறார். இந்நிலையில் கீர்த்தி சுரேஷின் சாவித்திரி தோற்றமும், ஜெமினி கணேசனாக நடிக்கும் துல்கர் சல்மான் தோற்றமும் இணையதளத்தில் வெளியாகி உள்ளது.