சாமி 2 படத்தில் த்ரிஷாவின் மருமகளாக நடிக்கவிருந்த நடிகை கீர்த்திசுரேஷ், திடீரென த்ரிஷா அந்த படத்தில் இருந்து விலகினார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தற்போது தெலுங்கு படம் ஒன்றில் நயன்தாராவின் மருமகளாக கீர்த்திசுரேஷ் நடிக்கவுள்ளார்

முன்னாள் ஆந்திரமுதல்வர் வாழ்க்கை வரலாறு படத்தில் மம்முட்டி நடிக்கவுள்ளார் என்பதும் அவருக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கவுள்ளார் என்பதும் தெரிந்ததே. இந்த நிலையில் ஜெகன்மோகன் ரெட்டியாக ஒரு பிரபல நடிகரும் அவருக்கு ஜோடியாக கீர்த்திசுரேஷும் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

இதன்படி பார்த்தால் கீர்த்திசுரேஷ், நயன்தாராவின் மருமகளாக நடிக்கின்றார் என்பது குறிப்பிடத்தக்கது. இன்னும் திருமணமே ஆகாத நயன்தாரா, இன்னொரு நடிகைக்கு மாமியாராக நடிக்க ஏற்றுக்கொண்டதே அவரை இன்னும் லேடி சூப்பர் ஸ்டார் பட்டத்திற்கு பொருத்தமானவராக திரையுலகம் பார்க்கின்றது.