பாகுபலி படம் மூலம் இந்திய புகழ் பெற்ற இயக்குனர் ராஜமவுலி அடுத்து இயக்கும் படத்தில் நடிகை கீர்த்தி சுரேஷ் ஒரு முக்கிய வேடத்தில் நடிப்பதாக கூறப்படுகிறது.

பாகுபலி படம் மூலம் இந்திய சினிமாவையே தன் பக்கம் திரும்பி பார்க்க வைத்தவர் இயக்குனர் ராஜமவுலி. இவர் அடுத்து ராம்சரண் மற்றும் ஜூனியர் என்.டி.ஆர் ஆகியோரை வைத்து புதிய படத்தை இயக்கவுள்ளார். இரு குத்து சண்டை வீரர்கள் தொடர்பான கதை எனவும், ராமாயணம் தொடர்பான கதை எனவும் செய்திகள் உலா வருகிறது.

 

இப்படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்க பருத்தி வீரன் பிரியாமணி ஏற்கனவே ஒப்பந்தம் ஆகியுள்ளார். இந்நிலையில், இப்படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்க கீர்த்தி சுரேஷிடம் படக்குழு பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தற்போது செய்தி கசிந்துள்ளது.

ராஜமவுலி இராமாயணம் கதையைத்தான் எடுக்கப் போகிறார். அதில் சீதை வேடத்தில் நடிக்கவே கீர்த்திசுரேஷிடம் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது என செய்தி வெளியாகியுள்ளது. ஏற்கனவே தெலுங்கில் நயன்தரா சீதா வேடத்தில் நடித்துவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.