கமல்ஹாசன் சகோதரருக்கு ஜோடியாக மாறினாரா கீர்த்திசுரேஷ் பாட்டி?

உலக நாயகன் கமல்ஹாசனை போலவே அவரது சகோதரரும் நடிகருமான சாருஹாசன் நடிப்புக்காக தேசிய விருது வாங்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சாருஹாசன் நீண்ட இடைவெளிக்கு பின்னர் தற்போது ‘தாதா 87′ என்ற படத்தில் ஹீரோவாக நடித்து வருகிறார். நாயகன்’ படத்தில் கமல் நடித்தது போலவே மும்பை டான் ஆக சாருஹாசன் இந்த படத்தில் நடிக்கின்றாராம்

இந்த படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் கீர்த்திசுரேஷின் பாட்டி சரோஜா நடித்து வருகிறார். இவர் சாருஹாசனுக்கு ஜோடியா? அல்லது வேறு கேரக்டரா? என்பது குறித்து படக்குழுவினர் தெரிவிக்க மறுத்துவிட்டனர்