இளையதளபதி விஜய் நடித்த ‘பைரவா’ படத்தில் நாயகியாக நடித்த கீர்த்தி சுரேஷ், மீண்டும் விஜய்யுடன் ‘விஜய் 62’ படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இதுகுறித்த அறிவிப்பை இந்த படத்தின் தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் தனது டுவிட்டரில் அறிவித்துள்ளது.

அந்த வகையில் காஜல் அகர்வால், சமந்தாவை அடுத்து மிக குறுகிய இடைவெளியில் விஜய்யுடன் மீண்டும் ஜோடி சேரும் நாயகி பட்டியலில் கீர்த்தி சுரேஷ் இணைந்துள்ளார்

இந்த ஆண்டு ‘தானா சேர்ந்த கூட்டம், ‘மகாநதி, சண்டக்கோழி, சாமி 2 ஆகிய படங்களில் நடித்துள்ள கீர்த்திசுரேஷ் தற்போது விஜய் படத்திலும் இணைந்துள்ளதால் இந்த ஆண்டு அவருக்கு சிறப்பான ஆண்டாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.