நடிப்பு என்பது ஒரு ரயில் பயணம் போல என்றும் ஒவ்வொரு நிறுத்தம் வரும்போதும் ஒவ்வொருவித அனுபவம் கிடைக்கும் என்றும் நமது இடம் எப்போது வரும் என்கிற ஆர்வம் இருக்கும் என்றும் நான் இப்போது நடிப்பு என்ற ரயில் பயணாத்தில் இறங்கி ஏறிக்கொண்டு இருக்கிறேன் என்றும் நடிகை கீர்த்திசுரேஷ் சமீபத்தில் அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.

கீர்த்திசுரேஷ் நடித்த ‘நடிகையர் திலகம்’ திரைப்படத்தின் வெற்றியை அடுத்து அவருக்கு நாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கேரக்டர்கள் அதிகம் வருவதாகவும், ஆனால் இப்போதைக்கு கமர்சியல் படத்தில் நடிக்க விரும்புவதாகவும் அவர் தெரிவித்தார்.

நயன்தாரா, திரிஷா போல் முதலில் பல கமர்ஷியல் படங்களில் நடித்துவிட்டு அதன் பின்னர் என்னுடைய இடத்தை தக்கக வைத்து கொண்டு நாயகிகளுக்கு முக்கியத்துவம் தரும் படங்களில் நடிக்க திட்டமிட்டுள்ளதாக கீர்த்தி சுரேஷ் மேலும் தெரிவித்தார்.

தற்போது ‘விஜய் 62’, ‘சாமி 2’ உள்பட ஒருசில கமரிச்யல் படங்கள் கீர்த்தி சுரேஷ் கைவசம் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.