பிரமாண்ட இயக்குனர் ராஜமௌலியின் ‘ஆர் ஆர் ஆர்’ படத்தில் நடிக்க நடிகை கீர்த்தி சுரேஷ் ஒப்பந்தம்.

 

தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் தற்போது முன்னனி நடிகையாக வளம் வருபவர் கீர்த்தி சுரேஷ்.தமிழில் அவர் நடித்த சாமி 2,சண்டகோழி 2,சர்கார் ஆகிய படங்கள் திரைக்கு வந்து வெற்றி பெற்றது.தற்போது அவர் நடிக்க விருக்கும் அடுத்த படம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

பிரமாண்ட இயக்குனர் ராஜமௌலி ,பாகுபலி1,2 படத்திற்கு அடுத்ததாக ‘ஆர் ஆர் ஆர்’ என்னும் அடுத்த படத்தை இயக்குகிறார்.இந்த படத்தில் ஜூனியர் என் டி ஆர்,ராம் சரண்,கீர்த்தி சுரேஷ் ஆகியோர் நடிக்கின்றனர்.

வரும் 28 ஆம் தேதி முதல்கட்ட படப்பிடிப்பு தொடங்குவதாக தகவல் வெளியானது.ராஜமௌலி இயக்கும் படத்தில் நடிப்பதற்காக தனக்கு வந்த வேறு பட வாய்ப்புகளை நடிகை கீர்த்தி சுரேஷ் தவிர்த்தார்.