இந்தியா-இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நடந்த மூன்றாவது டெஸ்ட் போட்டியை வென்ற இந்திய அணி இந்த வெற்றியை மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள கேரள மக்களுக்கு சமர்ப்பிப்பதாக கூறியுள்ளனர். மேலும் மூன்றாவது டெஸ்ட் போட்டியின் ஊதியம் முழுவதையும் வழங்கவுள்ளனர் அணியினர்.

இங்கிலாந்து அணியை 203 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய பின்னர், இந்த வெற்றியைக் கேரள வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அர்ப்பணிப்பதாக அறிவித்தார் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி. மேலும் இந்தப் போட்டியின் மொத்த ஊதியத்தையும் கேரள மக்களுக்கு வழங்குவதாகவும் அறிவித்தார் அவர்.

கேப்டன் விராட் கோலியின் இந்த வார்த்தைகளை கேட்டதும் மைதானத்தில் இருந்த ரசிகர்கள் ஆச்சரியத்தில் ஆர்ப்பரிக்கத் தொடங்கினர். இந்திய அணி அறிவித்துள்ள ஒருநாள் ஊதியத் தொகை சுமார் 1.26 கோடி என கூறப்படுகிறது. வெற்றியை பாதிக்கப்பட்டவர்களுக்கு சமர்ப்பித்ததற்காக இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணிக்கு கேரள முதல்வர் பினராயி நன்றி தெரிவித்துள்ளார்.

மேலும், இங்கிலாந்தில் இருந்தாலும் அவர்கள் எங்களை நினைவில் வைத்துள்ளனர். உலகம் முழுவதுமே எங்களுக்கு அன்பை அனுப்புகின்றன. இது எங்களைப் பலப்படுத்துகிறது என்றார் முதல்வர் பினராயி விஜயன்.