பிரபல மலையாள சேனல் ஒன்றில் நிகழ்ச்சி தொகுப்பாளராக பணிபுரிந்து லட்சக்கணக்கானோர் பாராட்டுக்களை பெற்றவர் சூர்யா வாசன் என்று தொகுப்பாளினி. இவர் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சிகள் கேரள நேயர்களிடையே பிரபலம்

இந்த நிலையில் சூர்யாவாசன் சமீபத்தில் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றை தொகுத்து வழங்கும் பணியை முடித்துவிட்டு தனது இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பிகொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத வகையில் ஏற்பட்ட விபத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார். இவருடைய இழப்பு மலையாள தொலைக்காட்சி உலகில் ஈடு செய்ய முடியாதது என்று தொலைக்காட்சி நடிகர், நடிகைகள் கூறியுள்ளனர்.

மேலும் மறைந்த சூர்யா வாசனின் தந்தை கடந்த 5 மாதங்களுக்கு முன்னர்தான் இயற்கை எய்தினா என்பது அவரது குடும்பத்தினர்களின் தாங்க முடியாத துயரம் என்பது குறிப்பிடத்தக்கது.