சீரியல் நடிகா் நடிகைகள் தற்கொலை செய்து வருவது தொடர்ந்து நடப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கேரளாவில் பிரபல டிவி சீரியல் நடிகை ஒருவா் எரிந்த நிலையில் பிணமாக கிடந்தது கண்டுபிடிக்கப்ட்டுள்ளது. கேரளாவை சேர்ந்த இறந்த சீரியில் நடிகை கவிதா. வயது 35.

பிரபல மலையாள சீரியல் நடிகை கவிதா சீரியல்களில் நடித்து பிரபலமானவா். இவருக்கு திருமணமாகி நான்கு வயதில் மகள் உள்ளார். கவிதாவின் கணவர் பெங்களூரில் வசித்து வருகிறார். திருமண வாழ்க்கையில் பிரச்சனை ஏற்பட்டு இருவரும் தனித்து வாழ்ந்து வருகின்றனா். தனது மகளுடன் மலப்புரம் மாவட்டத்தில் உள்ள நீலாம்பூரில் வசித்து வருகிறார். மகளுக்கு பள்ளி விடுமுறை விட்டு உள்ளதால் உறவினர் வீட்டிற்கு மகளை அனுப்பி விட்டு தனியாக இருந்துள்ளார்.

சீரியல் நடிகை கவிதாவுக்கு பெங்களூரில் அழகு நிலையம் ஆரம்பிக்க வேண்டும் என்ற ஆசையில் பணம் சேர்க்க தொடங்கியுள்ளார். ஆனால் போதிய அளவு பணம் கிடைக்காத காரணத்தால் மன அழுத்தத்தில் இருந்தததாக கூறப்படுகிறது. இந்நிலையில் கவிதா தனது வீட்டில் எரிந்த நிலையில் பிணமாகக் கிடந்தது கண்பிடிக்கப்பட்டுள்ளது. அவர் கைப்பட எழுதிய கடிதம் ஒன்றும் கிடைத்துள்ளதாக செய்திகள் கூறப்படுகிறது.

அதுபோல கவிதாவின் கையில் மின்சார வயர் இருந்துள்ளது. அதோடு இல்லாமல் அவர் உடலில் மண்ணென்ணெய் ஊற்றப்பட்டதற்கான தடயங்களும் இருந்தது. இதுபற்றி காவல்துறை கவிதா தற்கொலை செய்து கொண்டாரா அல்லது இது கொலையா என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகிறார்கள்.