கன்னட நடிகர் யாஷ் நடிப்பில் பிரஷாந்த் நீல் இயக்கத்தில், வெளியான கடந்த ஆண்டு வெளியான படம் `கே.ஜி.எஃப்’.

கோலார் தங்கச் சுரங்கத்தை மையமாக வைத்து பெரும் பொருட்செலவில் எடுத்து இருந்தார்கள். கன்னடத்தில் மட்டுமல்லாமல் தெலுங்கு, தமிழ், இந்தி என பன்மொழிகளில் உலகம் முழுவதும் கே.ஜி.எஃப் படம் வெளியானது. இப்படம் இந்தியா முழுவதும் திரையரங்குகளில் நல்ல வசூலானது.

கன்னட படங்களிலேயே இதுவரை இல்லாத அளவுக்கு ரூ.200 கோடி வசூல் கே.ஜி.எஃப் படம் ஈட்டியது. இப்படத்தின் படத்தின் இரண்டாம் பாகம் உருவாக விரைவில் உருவாக உள்ளது. இந்த படத்தின் படப்பிடிப்பு, வரும் ஏப்ரல் மாதம் ஆரம்பமாகிறது.