கட்டப்பா சத்யராஜின் மிகப்பெரிய ரகசியம் இதுதான். குஷ்பு

சமீபத்தில் வெளியாகி வசூல் புரட்சி செய்த ‘பாகுபலி 2’ திரைப்படம் ரூ.1000 கோடி வசூலை பத்தே நாட்களில் எட்டி, சரித்திர சாதனை செய்தது என்பது தெரிந்ததே. இந்நிலையில் இந்த படத்தின் வெளியீட்டுக்கு கடைசி நேரத்தில் சிக்கல் எழுந்தபோது தன்மானத்தை பார்க்காமல் படக்குழுவினர்களின் நன்மை கருதி கன்னட மக்களிடம் வருத்தம் தெரிவித்தார் கட்டப்பா சத்யராஜ்

இந்த நிலையில் கட்டப்பா கேரக்டரில் சத்யராஜை தவிர வேறு யார் நடித்திருந்தாலும் இந்த அளவுக்கு படம் வெற்றி பெற்றிருக்காது என்று நடிகை குஷ்பு தனது டுவிட்டரில் கூறியுள்ளார். மேலும் கட்டப்பா சத்யராஜ் குறித்து தான் ஒரு ரகசியத்தை சொல்ல விரும்புவதாகவும், அவருடன் அதிக படங்களில் ஜோடியாக நடித்த நடிகை நான் தான் என்றும் குஷ்பு தனது டுவிட்டரில் மேலும் கூறியுள்ளார்

கட்டப்பா இந்தியாவிலேயே சிறந்த நடிகர்களில் ஒருவர் என்றும், அவருக்கு கண்டிப்பாக ‘பெரியார்’ படத்துக்கு தேசிய விருது வழங்கப்பட்டிருக்க வேண்டும் என்று கூறிய குஷ்பு, இந்த முறை பாகுபலி 2′ படத்திற்காவது அவர் விருதினை பெற வேண்டும் என்று தான் விரும்புவதாகவும் குஷ்பு கூறியுள்ளார்

சத்யராஜூம், குஷ்புவும் இணைந்து ‘புரட்சிக்காரன்’, வீரநடை’, ‘உன்னை கண் தேடுதே’, ‘பிரம்மா’, ‘கல்யாண கலாட்டா’, ரிக்சா மாமா’, ‘பெரியார்’, ‘மலபார் போலீஸ்’, ‘நடிகன், ‘வெற்றிவேல் சக்திவேல்’, ‘சுயம்வரம் ஆகிய படங்களில் நடித்துள்ளனர்.