பொள்ளாச்சியில் ஜூஸ் என நினைத்து மண்ணெண்ணெயை குடித்த ஒன்றரை வயது குழந்தை பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கோவை மாவட்டம் பொள்ளாச்சி எம்.ஜி.புதூரை சேர்ந்தவர் விஜயகுமார். இவருக்கு திருமணமாகி ஒன்றரை வயதில் அநன்யா என்ற மகள் இருந்தார் .

இதையும் படிங்க பாஸ்-  தைலமரக்காட்டில் உல்லாசமாய் இருந்த இளம்பெண்: கடைசியில் நேர்ந்த கொடூரம்!!

சம்வத்தன்று விஜயகுமார் வேலைக்கு சென்றிருந்த போது அவரது மனைவி சமையலறையில் வேலை செய்து கொண்டிருந்தார். ஹாலில் ஒரு கேனில் மண்ணென்ணெய் இருந்தது. ஹாலில் விளையாடிக்கொண்டு இருந்த அநன்யா மண்ணெண்ணையை ஜூஸ் என நினைத்து எடுத்து குடித்தார். சற்று நேரத்தில் குழந்தை வீர் என அழுதது.

இதையும் படிங்க பாஸ்-  எதிரிகளையும் மனதால் வென்ற ஸ்ரீதேவி: பாகிஸ்தான் பிரபலங்களும் இரங்கல்

பதறியடித்தபடி சமையலறையில் ஓடி வந்த அநன்யாவின் தாய் குழந்தை மண்ணென்ணெய் குடித்துருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். உடனடியாக குழந்தை மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள் குழந்தை எற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதனால் அவரது பெற்றோர் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர். குழந்தைகள் இருக்கும் வீட்டில் தயவு செய்து இந்த மாதிரி ஆபத்தான பொருட்களை அவர்கள் கண்ணில் படும்படி வைக்காதீர்கள். அப்படி வைத்தால் இந்த மாதிரியான அசம்பாவிதங்கள் தான் நடைபெறும்.