சினேகாவை கடத்திய மர்ம நபர்கள்

புன்னகை அரசி என்று அழைக்கப்பட்ட நடிகை சினேகா சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தாா். நடிகா் பிரசன்னாவை கல்யாணம் செய்து வாழ்க்கையில் செட்டிலனாா். தற்போது சினிமாவில் சின்ன கேரக்டாில் நடித்து வருகிறாா். தொலைக்காட்சியில் நடுவராகவும் இருந்து வருகிறாா்.

இந்நிலையில் கோவையில் நடைபெற்ற தனியாா் நிகழ்ச்சியில் பங்கேற்க சென்ற நடிகை சினேகாவை மர்ம நபா்கள் கடத்தி சென்றது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவையில் தனியாா் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள நடிகை சினேகா சென்றுள்ளாா். அங்குள்ள தனியாா் ஓட்டலில் ஜிபிஎஸ் சம்பந்தமான செயலியை அறிமுகம் செய்யும் விழாவில் கலந்து கொண்டாா். அப்போது அந்நிகழ்ச்சியின் இடையில் முகம்மூடி அணிந்து வந்த மா்ம நபா்கள் அவரை கத்தி முனையில் கடத்தி சென்றனா். இதனை பாா்த்து அனைவரும் அதிா்ச்சியடைந்தனா். அனைவருக்கும் குழப்பம் ஏற்பட்டது.

அப்போது யாரும் திகைக்க வேண்டாம் என்று கூறிய நிகழ்ச்சி ஏற்பட்டாளா்கள் இது வெறும் செயலி தொடா்பான ஒரு செம்பிள் ஒத்திகை தான் எனக் கூறினாா். இதை கேட்ட பின் தான் அனைவரும் அமைதியாகினாா்கள். இப்படி யாரும் எதிா்பாராமல் திடீரென சினேகா கடத்தப்பட்ட சம்பவத்தால் சிறிது நேரம் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.