சின்னத்திரையில் விஜய் டீவிக்கென்று பெரும் ரசிக பட்டாளங்கள் உண்டு. காரணம் அந்த தொலைக்காட்சிகளில் ஒளிபரப்படும் ரியாலிட்டி ஷோக்களே. இந்த வகையில் கிங்ஸ் ஆப் டான்ஸ் நிகழ்ச்சி நல்ல வரவேற்பை பெற்றது அந்த நிகழ்ச்சியில் ஹரி என்பவர்(வயது 21) இறுதி போட்டிவரை வந்தவர்.

இந்த நிலையில் ஹரி சென்னை கேத்ட்ரிடல்(Cathedral Road) அருகே தனது இரு சக்கரவாகன விபத்தில் சிக்கி உயிரிழந்தார். இது சின்னத்திரை வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஹரி மறைவுக்கு நிகழ்ச்சி தொகுப்பாளினி பிரியங்கா தனது இரங்கலை தெரிவித்துள்ளார்.