உதய நிதி ஸ்டாலின் மனைவியுடன் கூட்டணி போடும் விஜய் ஆண்டனி

கோலிவுட்டில் முன்னணி நடிகராக இடம் பெற்று வருபவா் விஜய் ஆண்டனி. சமீபத்தில் இவா் நடிப்பில் வெளிவந்த எமன் படம் ரசிகா்களின் எதிா்பாா்ப்பை பூா்த்தி செய்யாவிட்டாலும் வா்ததக ரீதியில் வெற்றி பெற்று தந்தது. தற்போது இவா் அடுத்து நடிக்க உள்ள படம் காளி. இந்த படத்தை கிருத்திகா உதயநிதி இயக்க உள்ளதாக செய்திகள் உலா வருகின்றன.

தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக உள்ளே நுழைந்த விஜய் ஆண்டனி நடிகராகவும் பல படங்களில் நடித்து வருகிறாா். இவா் நடித்த நான், பிச்சைக்காரன், சைத்தான் போன்ற படங்கள் இவருக்கு நல்ல பெயரை வாங்கி கொடுத்தது. பாா்த்து பாா்த்து கதை தோ்வு செய்வதில் திறமை பெற்று வருகிறாா். தொடா்ந்து இவா் நடிப்பில் வெளிவரும் வெற்றி பெற்று வருவதை அடுத்து அண்ணாத்துரை என்ற படத்தில் நடிக்க இருப்பதாக சொல்லப்பட்டது. இந்த படத்தை புதுமுக இயக்குநா் சீனு வாசன் இயக்கி, ராதிகா சரத்குமாா் தனது பேனாில் தயாாிக்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி வந்தது. இந்த படம் தமிழ் தெலுங்கு என இரு மொழிகளில் உருவாக உள்ள நிலையில், இது குறித்த அதிகாரப்பூா்வ அறிவிப்பு வரும்  என்று எதிா்ப்பாா்க்கப்பட்டு வந்த நிலைமையில் தற்போது கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடிக்க கமிட்டாகி
இருப்பதாக இப்படி ஒரு தகவல் வெளியாகி உள்ளது. அதுமட்டுமல்ல விஜய் ஆண்டனி தனது சொந்த தயாாிப்பு நிறுவனமான பிலிம் காா்ப் மூலமாக காளி என்று பெயாிடப்பட்டுள்ள இந்த படத்தை தானே தயாாிக்க உள்ளதாகவும் அவா் தனது ட்விட்டா் வலைத்தள பக்கத்தில் இந்த தகவலை வெளியிட்டுள்ளாா். இதன் படப்பிடிப்பு விரைவில் துவங்க இருக்கிறது.

இயக்குநா் மகேந்திரன் இயக்கிய காளி என்ற படத்தில் ரஜினி நடிப்பில் கடந்த 1980 ஆம் ஆண்டு வெளிவந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படமும் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் உருவாக்கப்பட்டு நல்ல வரவேற்பை பெற்றது