சேலம்-சென்னை 8 வழிச்சாலை திட்டத்துக்கு தற்போது தமிழக அரசு நிலம் கையகப்படுத்தி வருகிறது. இந்த திட்டத்துக்காக விவசாய நிலங்களை கையகப்படுத்துவதற்கு பல்வேறு தரப்பிலிருந்தும் எதிர்ப்புகள் கிளம்பின.

இதற்காக தமிழகத்தில் பல்வேறு போராட்டங்கள் தற்போது நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இதனை மையமாக வைத்து ‘பசுமை வழிச்சாலை’ என்ற பெயரில் திரைப்படம் உருவாகி வருகிறது.

இதையும் படிங்க பாஸ்-  ரஜினி பின்னால் இருப்பது இவா்கள்தானம்!

இந்த படத்தில் ‘வெண்ணிலா கபடிக் குழு’ கிஷோர் நாயகனாக நடித்து வருகிறார். ஜஸ்டின் பிரபாகரன் இசையமைக்கிறார்.

இந்த படத்தை சந்தோஷ் கோபால் என்பவர் இயக்குகிறார். இவர் ஏற்கனவே இவர் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக தமிழகத்தில் நடந்துவந்த போராட்டத்தை அடிப்படையாகக் கொண்டு ‘ஜல்லிக்கட்டு 5-23 ஜனவரி 2017’ என்ற படத்தை இயக்கி முடித்துள்ளார்.

இதையும் படிங்க பாஸ்-  சத்யராஜ், கிஷோரிடம் நிறையவே கற்றுக் கொண்ட விவேக் ராஜ்கோபால்

இதனைத் தொடர்ந்து இவர் தற்போது இயக்கிவரும் பசுமை வழிச்சாலை படத்துக்காக படக்குழுவினர் இமயமலைப் பகுதிகளில் படப்பிடிப்பு நடத்தி வருகின்றனர்.