‘பாகுபலி’யை விட பெரிய வெற்றியை மிஸ் செய்துவிட்டார ரஜினி! ஏ.ஆர்.ரஹ்மான்

கடந்த மாதம் வெளிவந்த ‘பாகுபலி 2’ படத்தின் வெற்றி குறித்துதான் கடந்த ஒரு மாதமாக இந்திய திரையுலகமே பேசி வருகிறது. அமீர்கானின் ‘டங்கல்’ படம் ‘பாகுபலி 2’ படத்தின் வசூலை நெருங்கிவிட்டாலும் ஸ்டார் வேல்யூ இல்லாத ஒரு படம் உலக அளவில் பிரமாண்ட வெற்றி பெற்றுள்ளது என்பது அசைக்க முடியாத சாதனையாக கருதப்படுகிறது.

இந்த நிலையில் பாகுபலி 2′ படத்தின் வெற்றியை விட பலமடங்கு வெற்றி பெற்றிருக்க வேண்டிய படம் ரஜினியின் ‘கோச்சடையான்’ படம் என்றும், ஆனால் அந்த படத்தின் அனிமேஷன் மற்றும் சிஜி பணிகள் சரியில்லாததால் படம் தோல்வி அடைந்தது என்றும் ஏ.ஆர்.ரஹ்மான் கூறியுள்ளார். இயக்குனர் செளந்தர்யா தேர்வு செய்த பணி சரியாக இருந்தாலும் அதை அவர் செயல்படுத்திய விதம் சரியில்லை என்றும் இதற்கு பட்ஜெட்டும் ஒரு காரணம் என்றும் அவர் தெரிவித்தார்.

ஆனால் ‘கோச்சடையான்’ குழுவினர் செய்த தவறை ‘பாகுபலி 2’ படக்குழுவினர் செய்யவில்லை என்றும் அனைத்து வகையிலும் கச்சிதமாக இந்த படம் இருந்ததாகவும், அதோடு கொஞ்சம் அதிர்ஷ்டமும் ஒட்டிக்கொண்டதால் இந்த படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றதாக ரஹ்மான் தனது ஃபேஸ்புக்கில் தெரிவித்துள்ளார். மேலும் இந்த படம் ரூ.2000 கோடிக்கும் மேல் வசூலாகும் என்று தான் நம்புவதாகவும் அவர் மேலும் கூறியுள்ளார். ரஹ்மானின் இந்த பாராட்டுக்கு இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமெளலி நன்றி தெரிவித்துள்ளார்.