ரஜினி நடிப்பில் வெளிவந்த கோச்சடையான் படத்தில் சின்மயி பாடிய பாடலை வைத்து நெட்டிசன்கள் ஒரு மீம்ஸ் போட்டுள்ளனர். அதை ரசித்து பார்த்து பாடகி சின்மயி பாராட்டி இருக்கிறார்.

சமூக வலைத்தளத்தில் சினிமா பிரபலங்களும், அனைத்து தரப்பினரும் எப்போதும் சுறுசுறுப்பாக இருந்து வருகின்றனர். அதிலும் சில பிரபலங்கள் ரசிகா்களின் ட்வீடுக்கு நச் நச் என்று பதிலளித்து ஆக்டிவாக இருக்கிறார்கள். அதில் குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்றால் காயத்ரி ரகுமாம், நடிகை கஸ்தூரி, குஷ்பு ரசிகா்களின் ட்விட்டுக்கு டக்கென்றும், நச்சென்றும் பதிலளித்து விடுவார்கள். அந்த வகையில் பாடகி சின்மயியும் தனது பாடலை எடிட் செய்து போட்டுள்ள மீம்ஸ் பார்த்து பாராட்டி உள்ளார். அதுபோல தப்பென்று நறுக்கென்று வெட்டியும் விடுவார். சின்மயி ரஜினியின் கோச்சடையான் படத்தில் இதயம் நழுவி என்ற பாடலை வைத்து எடிட் செய்து மீம்ஸ் வீடியோ வெளியிட்டுள்ளனர்.

அந்த பாடலை வடிவேலும், சிங்கமுத்துவும் செய்யும் கலாட்டாவை வைத்து எடிட் செய்து மீம்ஸ் வீடியோவாக வெளியிட்டுள்ளது சரியாக பொருந்தியுள்ளது. அந்த மீம்ஸ் வீடியோவை பார்த்து சின்மயி பாராட்டி ட்வீட் செய்துள்ளார். அவர் செய்த ட்வீட் என்னவென்றால், ஆகா என்ன ஒரு எடிட், என்னுடைய பாடலை இப்படி அழகாக எடிட் செய்து விதத்தை நான் எதிர்பார்க்கவே இல்லை என்று பதிவு செய்துள்ளார்.