கொடி வீரன் படத்திற்காக மொட்டை போட்ட நடிகை பூர்ணா..

08:38 மணி

Loading...

இயக்குனர் முத்தையா இயக்கும் கொடி வீரன் படத்திற்காக நடிகை பூர்ணா தனது தலையை மொட்டை அடித்துள்ளார் என்பது தெரியவந்துள்ளது. தமிழ் சினிமாவில் ஜன்னலோரம், சவரக்கத்தி, வித்தகன் ஆகிய படங்களில் நடித்தவர் நடிகை பூர்ணா.

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் நடித்திருந்தாலும், சினிமா உலகில் அவரால் பெரிதாக புகழ் பெறமுடியவில்லை. இந்நிலையில்தான் அவரைத் தேடி ‘கொடி வீரன்’ படத்தில் நடிக்கும் வாய்ப்பு அவரை தேடி வந்தது. இப்படத்தில் நடிகர் சசிக்குமார் கதாநாயகனாக நடிக்கிறார். சசியை வைத்து ஏற்கனவே ‘குட்டிப்புலி’ படத்தை இயக்கிய முத்தையா இப்படத்தை இயக்கியுள்ளார்.

இப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள பூர்ணா ஒரு காட்சிக்காக மொட்டை அடிக்க வேண்டும் என இயக்குனர் கேட்ட, அதற்கு உடனே அவர் ஒப்புக்கொண்டாராம். இதுபற்றி கருத்து தெரிவித்துள்ள பூர்ணா “ கொடி வீரன் படத்தில் எனது கதாபாத்திரத்தை கேட்டவுடன் இப்படத்தை விட்டு விடக்கூடாது எனத் தோன்றியது. மொட்டை அடிக்க வேண்டும் என கேட்டார்கள். கதாபாத்திரத்திற்கு தேவை என்பதால் துணிச்சலாக அதற்கு சம்மதித்தேன். மற்ற நடிகைகள் செய்யாத விஷயங்களை நாம் செய்தால்தான் நாம் தனித்து தெரிவோம்” என் அவர் பேட்டியளித்துள்ளார்.

 

(Visited 45 times, 1 visits today)