கடந்த 2012-ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவின் சிட்னியில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியின் போது இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி ரசிகர்களை நோக்கி நடுவிரலை தூக்கி காட்டிய சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியது. இது தொடர்பாக தற்போது மனம் திறந்து பேசியுள்ளார் இந்திய கேப்டன் விராட் கோலி.

இதையும் படிங்க பாஸ்-  அதிமுக நாளிதழின் கேவலமான செயல் – இணையத்தில் பெருகும் கண்டனம் !

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் விளையாடிவரும் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி, விஸ்டன் கிரிக்கெட் மாத இதழுக்குப் பேட்டியளித்துள்ளார். அதில் நடுவிரலைக் காட்டிய சம்பவம் தன் வாழ்நாளின் மிக மோசமான தருணம் என்று குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க பாஸ்-  ஊழியருக்கு சம்பளம் கொடுக்க காசு இல்லாததால் கப்பல் விற்பனை

போட்டிக்கு பின்னர் நடுவர் ரஞ்சன் மதுகல்லே, என்னை அழைத்து விளக்கம் கேட்டார். ஆனால் நான் சம்பவத்தை மறைத்து சமாளித்தேன். உடனே நான் நடுவிரலைக் காட்டிய புகைப்படம் முதல் பக்கத்தில் வந்திருந்த ஒரு நாளிதழை என் முன் வைத்தார் நடுவர். நான் உடனே அவரிடம் என்னை மன்னித்துவிடுங்கள். எனக்குத் தடை விதித்து விடாதீர்கள் என்று கெஞ்சினேன். அவர் மிகவும் நல்லவர். வீரர்களின் ஆரம்பகாலத்தில் இதுபோன்ற சம்பவங்கள் நடப்பது சகஜம் என அவர் புரிந்துகொண்டிருந்தார் என கோலி குறிப்பிட்டார்.